வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனிடையே குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் ஓட்டேரி ஏரி என்ற சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முழு கொள்ளளவை எட்டி இன்று எட்டியது. இதனையடுத்து  செட்டிகுப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த கிராம மக்கள் ஏரி நிரம்பியதையடுத்து ஆடு வெட்டி, மலர் தூவி நீரை வரவேற்றனர். மேலும் கிராம பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Advertisment