Advertisment

'அறிவாலயத்தின் முன்பே விவசாயிகள் கைது'-கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி

1043

'Farmers were arrested before the Arivalayam' - Edappadi Palaniswami is furious Photograph: (admk)

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முன்னே வைத்து விவசாயிகள்  கைது செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட விவசாய விளைநிலங்களை அரசுத் திட்டத்திற்காக கையாகப்படுத்துவதை எதிர்த்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முதல்வர்-ஐ சந்தித்து மனு கொடுக்க வந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் வாசலிலேயே வைத்து அவர்களை திமுக அரசின் காவல்துறை கைது செய்து அடைத்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Advertisment

ஒரு முதல்வராக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பார்த்தால், மக்களிடம் மனு வாங்கக் கூட இன்றைய பொம்மை முதல்வருக்கு மனமில்லையா? கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு மக்களிடம் மனு கேட்டு பெட்டியோடு அலைந்தவர், ஆட்சியில் இருக்கும் போது ஏழை விவசாயிகளின் மனுவைப் பெறக் கூட மனமின்றி இருப்பது ஸ்டாலினின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.

கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்து, அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் மனுவைப் பெறவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

anna arivalayam dmk. mk.stalin dmk admk edapadi palanisamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe