விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு வரி போடுவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. இதற்கு விவாசயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள், பொதுமக்கள் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உலகுக்கு உணவளிக்கும் விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கும் வரி போடும் ஒன்றிய பா.ஜ.க அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி. கற்பனைச் செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் கண்ணன், விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், சங்கத்தின் பொருளாளர் ராமச்சந்திரன், விதொச மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாநில குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், மாவட்ட துணைத் தலைவர் செல்லையா, விவசாய சங்க மாவட்டக்குழு ஆழ்வார் உள்ளிட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க உறுப்பினர்கள், விவாசயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி போடும் ஒன்றிய மோடி அரசின் முடிவை கண்டித்தும், உடனடியாக முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.