தமிழ்நாட்டில் ஏரி, குளம், கன்மாய்ள் வரத்து வாரிகளும், மராமத்து குறைவாலும், ஆக்கிரமிப்புகளாலும் தண்ணீர் நீர்நிலைகளில் தேக்கி வைக்க முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் ஆழமாக போய்க் கொண்டிருக்கிறது. அதனால் மழைநீரை சேமிக்க, அரசும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரமணி, தனது வீட்டில் விழும் மழைத்துளிகளை குழாய்கள் மூலம் சேகரித்து ஆழமாக கட்டியுள்ள தண்ணீர் தொட்டியில் சேமித்து குடிக்கவும் வீட்டு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக இதே போல தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் வீரமணி குடும்பம் தண்ணீர் தொட்டி நிரம்பியதும் எஞ்சியுள்ள தண்ணீரை பழைய கிணற்றில் இறக்கிவிடுகிறார். இதே போல ஒவ்வொருவரும் மழைத் தண்ணீரை சேமித்து பயன்படுத்தலாம் என்கிறார்.

Advertisment

அதே போல சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம், தனது வீட்டின் மேல் விழும் மழைத்தண்ணீரை குழாய்கள் மூலம் சேகரித்து தண்ணீர் தொட்டியில் சேமித்து பயன்படுத்துவதுடன் தொட்டி நிரம்பியதும் பயன்பாட்டில் உள்ள தன் ஆழ்குழாய் கிணறுக்குள் தண்ணீர் வெளியேற்றும் குழாய் மூலமே ஆழ்குழாய் கிணறுக்குள் அனுப்புகிறார். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தனது ஆழ்குழாய் கிணற்றில் குறையாமல் தண்ணீர் கிடைப்பதாக கூறுகிறார். இது போன்ற முறைகளில் மழைத்தண்ணீரை பூமிக்குள் அனுப்பினால் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும்.