சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் நிலையம் முன்பு கடந்த மே மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் (பூசா மற்றும் கமலா) இரண்டையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு அரசு மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கடலூர் மாவட்டச் செயலாளர் மணிக்கொல்லை ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். விவசாய சங்க பிரதிநிதிகள் பின்னத்தூர் ஹாஜா மொய்தீன், அறவாழி, பெருமாள், தாராசிங், பாலசுப்ரமணியம், கருப்பூர் ராஜாராமன், பன்னீர்செல்வம், பூவாலை அன்பு, தீத்தாம்பாளையம் லோகநாதன், இயற்கை உழவர்கள் சிவாயம் நாராயணசாமி, சிதம்பரம் சுரேஷ்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய மரபணு நெல் ரகங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/10/a5156-2025-09-10-07-59-21.jpg)