Farmers make repeated demands due to Elephants damaging farmland
தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளன. அந்த இடத்தில் பலாப்பழம், தென்னை, பனை, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் யானை ஒன்று தனதுதும்பிக்கையால் உயரமான பனைமரத்தை கீழே தள்ளும் வீடியோ தற்பொழுது இனைய தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒட்டி உள்ள விவசாய நிலத்திற்குள் அவ்வப்போது யானைகள் உள்ளே புகுந்து விளை நிலத்தை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகின்றன. மேலும் அவ்வப்போது வனத்துறையினரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். விளை நிலத்தை யானைகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், வனத்துறையினர் விளைநிலத்திற்குள் யானைகள் வராமல் தடுக்கவேண்டும் என்றும், வனப்பகுதிக்குள் யானைகளை உடனடியாக விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Follow Us