ஈரோடு மாவட்டம் வெள்ளி திருப்பூர் அருகே எண்ணமங்கலம், ஆலயங்கரட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார் (45). விவசாயி. ஒரு ஏக்கர் நிலத்தில் அதேப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். தற்போது மக்காச்சோளம் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் செலம்பூரம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றிகள் ஜெயக்குமார் தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோளம் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.

Advertisment

இது குறித்த தகவலின் படி அந்தியூர் வன அதிகாரி ஈஸ்வரமூர்த்தி, ஊழியர்கள் சீனிவாசன் ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இப்பகுதியில் காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம், மரவள்ளி, கரும்பு பயிர்கள் தொடர்ந்து சேதம் அடைகிறது. அவற்றைக் கட்டுப்படுத்த வனத்தை ஒட்டி அகழி, மின்வேலி அமைக்க வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் வேதனையில் உள்ள விவசாயிகள்.

Advertisment