Farmers boycott agricultural grievance redressal meeting and chant against government
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் தள்ளுபடி, தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் போன்ற எந்த அறிவிப்பும் இல்லாததை கண்டித்து இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் ஆரம்பித்து சில நொடிகளிலே விவசாயிகள் அரசுக்கு வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை, ஆகையால் நாங்கள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கிறோம் எனக் கூறி கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வெளியேறினர்.
மாதம் தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி அரசுக்கு எதிராக கோஷமிட்டு வெளியேறி சென்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.
Follow Us