'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''நான் சேலத்தில் பால் பண்ணையில் சேர்மேனாக இருந்த பொழுது லாபம் ஈட்டும் வகையில் செயல்பட்டு அதற்காக பரிசு பெற்றேன் என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, 'திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் அமல்படுத்துவோம். தொடர்ந்து விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை முன்னெடுப்போம். திமுக ஆட்சியில் நிதி ஆதாரத்தை உருவாக்க முடியவில்லை. கடனை தான் அதிகரித்து இருக்கிறார்கள்'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. விவசாயிகளின் பல்வேறு குறைகளை எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். அப்பொழுது அதிமுக ஆட்சியில் கள் விற்பனைக்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை என விவசாயி ஒருவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிமுகவினர் கேள்வி எழுப்பிய விவசாயியை சமாதானப்படுத்தும் முன்ற பொழுது அங்கு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.