டிராக்டரால் வந்த வினை;  விவசாயிக்கு நேர்ந்த சோகம்

102

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கீழ் கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். விவசாயியான சுதாகர், தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதனிடையே, அவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தன. அதற்காக இன்று ஹாலோ பிரிக்ஸ் கற்கள் தேவைப்பட்டதால், அவற்றைத் தனது டிராக்டரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது, நிலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த மேடான பகுதியில் டிராக்டரை ஏற்ற முயன்றார். ஆனால், டிராக்டர் மேடான பகுதியில் ஏற முடியாமல் திணறியது. இருப்பினும், சுதாகர் டிராக்டரை மேடு மீது ஏற்ற முயற்சித்து வந்தார். ஒரு கட்டத்தில், டிராக்டரின் முன்பகுதியும் பின்பகுதியும் ஒரே நேரத்தில் மேலே தூக்கியதால், நடுவில் சுதாகர் சிக்கிக் கொண்டார்.

பின்னர், அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், டிராக்டரின் நடுவில் சிக்கியிருந்த சுதாகரை மீட்டனர். ஆனால், சம்பவ இடத்திலேயே சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தாலுகா காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டிராக்டரின் இடுக்கில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Farmer police
இதையும் படியுங்கள்
Subscribe