தென்காசி மாவட்ட ஆட்சியர் அரங்கில் வழக்கமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது.

Advertisment

மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் வேளாண்மை இணை இயக்குனர் அமலா, துணை இயக்குனர் கனகம்மாள், தோட்டக் கலை துணை இயக்குனர் ஜெசிமா பானு மற்றும் அரசு அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் செங்கோட்டை கடையம், தென்காசி, கடையநல்லூர் வட்டாரங்களில் கார் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள இடங்களில் விவசாயிகள் பயனடையும் வகையில் 22 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிற விபரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

Advertisment

அப்போது கரிசல்குளம் பகுதி விவசாயியான சந்தானம் தங்கள் பகுதிக்கான பயிர் காப்பீட்டுத் தொகை பத்து வருடமாகக் கிடைக்காமல் போனதால் விவசாயிகள் மன உளைச்சலால் இன்னல்பட்டு வருவதாகப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். இதனால் பதற்றமான அதிகாரிகள், விவசாயிகளின் முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு 108 ஆம்புலன்சில் அவரை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் விவசாயிகள் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.