ஜனநாயகன் திரைப்படத்தின் ஒரு டிக்கெட் ரூ.1000வரை விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ரசிகர் மன்ற நிர்வாகி ஆடியோ வெளியாகி கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடுஅதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தாலுகா அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் கடைசி படம் என்ற அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் திரைப்படம் 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது . விஜயின் கடைசி படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் , தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சத்தியபாமா, சண்முகா, லட்சுமி என மூன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்குக் கட்டணமாக ஒரு டிக்கெட் ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் ரசிகர் ஒருவர் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் 600, 800, 1000 என ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு கட்டணம் என்று அந்த ரசிகர் மன்ற நிர்வாகி கூறும் தகவல் உள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/09/kovilpatti-jananayagan-1-2026-01-09-22-49-46.jpg)
இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். ஏழை, சமதர்மம் என்று பேசும் த.வெ.க தலைவர் விஜய் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு எதிரான இந்த சம்பவத்தை ஏன் அவர் கண்டிக்கவில்லை என்றும் பெரும் குரல்கள் கிளம்பியிருக்கின்றன. இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow Us