தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் சங்கர் கணேஷ். நடைய மாத்து, செப்புகொடம், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா உள்ளிட்ட பாடல்கள் இவரது இசையமைப்பில் உருவானவை. தமிழக திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் ஆவார். கழுத்தில் நகை மற்றும் கைகளில் கையுறை அணிந்திருப்பது இருவருடைய ஸ்டைல் ஆகும். விபத்து ஒன்றில் கையில் ஏற்பட்ட தீக்காயத்தை மறைக்கும் வகையில் அவர் அணியத் தொடங்கிய கையுறை காலப்போக்கில் இவருடைய அடையாளம் ஆனது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/17/a5266-2025-09-17-12-08-09.jpg)
அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சங்கர் கணேஷ், தன்னுடைய இசையமைப்பு அனுபவங்களை பல்வேறு யூடியூப் தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று கரூரில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பாடல் பாடுவதற்காக தயாராகி மாநாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.