தமிழ் திரைப்பட இயக்குனர் வி.சேகர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிக குடும்ப படங்கள் மூலம் பிரபலமானவர் வி.சேகர். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், வரவு எட்டணா செலவு பத்தணா, பொங்கலோ பொங்கல், விரலுக்கேத்த வீக்கம் ஆகியவை இவர் இயக்கிய படங்கள் ஆகும். இந்நிலையில் அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

வி.சேகரின் மறைவுக்கு பாமகவின் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான வி.சேகர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

Advertisment

தமிழ்த் திரையுலக வரலாற்றை வி. சேகர் அவர்களை தவிர்த்து விட்டு எழுதி விட முடியாது. திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கான கருவிகள் என்பதையும் கடந்து, தமது திரைப்படங்கள் வாயிலாக பொதுவுடமை, சமத்துவம், சமூகநீதி கருத்துகளைப் பரப்பியவர். முகம் சுழிக்காமல் குழந்தைகளுடன் குடும்பமாக சேர்ந்து பார்க்கும் வகையிலான திரைப்படங்களை படைத்தவர். தமிழ் மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றில் அக்கறை கொண்டிருந்ததுடன், அவற்றின் சிறப்புகளையும், பெருமைகளையும்  தமது திரைப்படங்கள் வாயிலாக  எடுத்துக்  கூறியவர்.

இயக்குனர் வி.சேகர் அவர்களை இழந்து வாடும்  குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Advertisment