சுப நிகழ்ச்சிக்காக குடும்பத்தினர் சென்று கொண்டிருந்த கார் நடுவழியில் திடீரென தீப்பிடித்ததால் காரில் இருந்தவர்கள் அலறி அடித்தபடி வெளியே தப்பி ஓடிய சம்பவம்  தேனியில்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தேனி மாவட்டம் கம்பம் அருகே பரபரப்பான சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் முன் பகுதியில் தீப்பிடிக்கத் தொடங்கியது. உடனடியாக காரை ஓரமாக ஓட்டுநர் நிறுத்திய நிலையில் காரில் இருந்தவர்கள் அவசரமாக வெளியே ஓடின.ர் விசாரணையில் கம்பம் மொட்டுப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிக்காக தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது காரின் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு தீப் பிடித்தது தெரிந்தது. உடனடியாக அங்கு வந்த கம்பம் தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment