Advertisment

ரூ.3 லட்சத்திற்குக் கொத்தடிமையாக்கப்பட்ட குடும்பம் மீட்பு!

Untitled-1

சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி ராதிகா, சிவகங்கை ஆர்டிஓ விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கிய மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்புக் குழுவினர், ஆகஸ்ட் 29 அன்று சிவகங்கை அருகேயுள்ள சாணிப்பட்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, அய்யனார் கோவில் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, ஆவுடையான் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் நீலகண்டன் (31), அவரது மனைவி முனியம்மாள் (29), மற்றும் அவர்களது 11 வயது மகன் என்பது தெரியவந்தது.

Advertisment

மேலும் விசாரித்ததில், சிவகங்கை அருகேயுள்ள கண்டாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், இவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து வேலைக்கு அழைத்து வந்து, கொத்தடிமையாக வைத்திருந்தது உறுதியானது. இதையடுத்து, குழுவினர் மூவரையும் மீட்டனர்.

Advertisment

இது தொடர்பாக, கண்டாங்கிபட்டி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) சரண்யா அளித்த புகாரின் பேரில், சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் இளையராஜா மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, தேவராஜன் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது, இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

police sivagangai district
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe