'தற்கொலை எண்ணம் தவறானது'- மன அழுத்தமோ தற்கொலை எண்ணமோ ஏற்பட்டால் அதிலிருந்து நீங்கி விடுபட தமிழக சுகாதார சேவை உதவி மையம் 104-ஐ அழைக்கவும்.
ஈரோட்டில் இறுதி ஈமச்சடங்கிற்கு பணத்தை வைத்துவிட்டு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருடைய மனைவி சகிலாதேவி தைராய்டு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு மனவளர்ச்சி குன்றிய மகளும் இருந்துள்ளார். மூவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு தத்தளித்த நிலையில் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்த ஒட்டுமொத்த குடும்பமே கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
தங்களுடைய ஈமச்சடங்கிற்காக 25,000 ரூபாய் வைத்திருப்பதாக கடிதத்தில் தெரிவித்துவிட்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.