Advertisment

ஆதவ் அர்ஜுனாவுக்கு என்.எஸ்.ஜி பாதுகாப்பு?; பொய்யாகப் பரப்பப்படும் சமூகவலைத்தள செய்தி

aadhav

False social media news being spread for NSG security for Adhav Arjuna

த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு என்.எஸ்.ஜி.பாதுகாப்பு கொடுத்ததாக பொய்த்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Advertisment

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Advertisment

இதற்கிடையில், த.வெ.க நிர்வாகியான த.வெக. பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இத்துயர சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இலங்கை, நேபாளம் போல அரசுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சர்ச்சையான நிலையில், சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கினார். இருப்பினும், கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாகக் கூறி ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றதாகத் தகவல் வெளியானது. இதனிடையே, அவர் பயணித்த விமானத்தில் அவருடன் என்.எஸ்.ஜி. பாதுகாவலர்களும் பயணித்த மாதிரி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவுடன் என்.எஸ்.ஜி பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தகவல் பொய்யான தகவல் என்று கூறப்படுகிறது. என்.எஸ்.ஜி பாதுகாப்பு ஆதவ் அர்ஜுனாவுக்கு கொடுக்கப்பட்டதாகச் சொல்வது மிக மிக அபத்தமாக இருக்கிறது. மேலும், என்.எஸ்.ஜி பாதுகாப்பு தரக்கூடிய அளவுக்கு அவர் இந்த இந்த தேசத்தில் பொறுப்பில் இல்லை. அப்படியிருந்தும் அவருக்கு என்.எஸ்.ஜி பாதுகாப்பு கொடுக்கப்பட்டது போன்ற பிம்பத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். இது குறித்து காவல் துறைக்கு கவனிக்குமா? என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

Security Aadhav Arjuna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe