புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலைகள் இயங்குவதாக வந்த செய்திகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதயம், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோயாளிகள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளை போலி மருந்து தொழிற்சாலை மூலம் தயாரித்து நாட்டில் உள்ள 16 மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரில் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேட்டுப்பாளையம், திருபுவனைபாளையம், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த போலி மருந்து தொழிற்சாலைகளின் 10க்கும் மேற்பட்ட குடோன்களை சோதனை செய்தனர்.
அப்போதுதொழிற்சாலையில் உள்ள நவீன எந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல் மொத்தம் 13 இடங்களில் சீல் வைக்கப்பட்டன.போலி தொழிற்சாலை நடத்தி வந்த ராஜா என்ற வள்ளியப்பன், பங்குதாரர் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன், குடோன் பொறுப்பாளர் வெங்கட், ராணா, மெய்யப்பன் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலை அதிபர் ராஜாவின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி அளவிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கில் சிக்கியுள்ள என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது மணிகண்டனை கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் "கா. மணிகண்டன் மீது போலி மருந்து விவகார குற்றச்சாட்டில் வழக்குப் பதியப்பட்டு காவல் துறை இவரை கைது செய்துள்ளனர். எனவே மேற்கூறிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட இவரை அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பதவியிலிருந்தும் மற்றும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/27/py-medicine-issue-2025-12-27-18-13-01.jpg)