Advertisment

கரூர் மின்வாரியத் தலைமைப் பொறியாளருக்கு பதவி உயர்வு: ‘உண்மை என்ன?’ - தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

புதுப்பிக்கப்பட்டது
karur-chief-engneer-fact-check

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், த.வெ.க.வைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Advertisment

இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்னதாக என். ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரை பிடிப்பதற்காக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Advertisment

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விஜய் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “சி.எம். சார் உங்களுக்கு ஏதாவது பழி வாங்கும் என்ற எண்ணம் இருந்தது என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் தோழர்கள் மீது கை வைக்காதீர்கள்” எனத் தெரிவித்தார். இத்தகைய சூழலில் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த கரூர் மின்வாரிய தலைவர் ராஜலட்சுமிக்கு தமிழ் நாடு பவர் ஜெனெரேஷன் கார்பொரேஷன் லிமிடெட் (TNPGCL) தொழில்நுட்ப இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.  

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “கரூரில் கடந்த 27.09.2025 அன்று த.வெ.க. கட்சித் தலைவர் விஜய் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, கரூர் மாவட்ட மின்வாரியத் தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், இவர் உட்பட 5 பேர் தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளனர். கரூரில் விஜய் கூட்டம் நடைபெறுவதற்கு 18 நாட்களுக்கு முன்பாகவே, கடந்த 09.09.2025 அன்று தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவர் இவர்களின் பதவி உயர்வுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால், ராஜலட்சுமி அவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டதைப்போல் திரித்து, மற்ற 4 பேர் பதவி உயர்வு பெற்றதை மறைத்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. தவறான தகவலைப் பரப்பாதீர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

explanation karur stampede ENGINEER PROMOTION TANGEDCO tneb Fact check
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe