பண்ருட்டி அருகே மாளிகாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் அதே ஊரைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனம் பிள்ளையார் குப்பம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த காரில் இருந்த மர்ம நபர்கள் கந்தனை விரட்டி விட்டு விட்டு ராஜேந்திரன் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டனர்.
இதில் சாலையில் எரிந்தவாறு வந்த ராஜேந்திரனை மீட்டு அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பண்ருட்டி டிஎஸ்பி ராஜா, காடம்புலியூர் ஆய்வாளர் நந்தகுமார் உள்ளிட்ட நான்கு தனி படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சித்திரை சாவடி பாடசாலை தெருவை சேர்ந்த பார்த்திபன் காரில் வந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேந்திரன் மகன் பூபதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி ஜெயப்பிரியா( 24) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்
ஜெயப்பிரியா கடந்த ஓராண்டாக பண்ருட்டியில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு சென்று வந்துள்ளார் அப்போது பண்ருட்டி காமராஜர் தெருவை சேர்ந்த தண்டபாணி மகன் மணிகண்டன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி மணிகண்டன் ஜெயப்பிரியா வீட்டிற்கு சென்று வந்துள்ளார் இதை ஜெயப்பிரியா மாமனார் ராஜேந்திரன் கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்கு மோதல் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக மணிகண்டன் தனது நண்பர்களான சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த கோபால் மகன் குபேந்திரன் மற்றும் பார்த்திபன் ஆகிய இரண்டு பேருடன் சேர்ந்து மது அருந்திய போது திருமணத்தை மீறீய நிலையில் உள்ள ராஜேந்திரனை தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அவரது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதில் தொடர்புடைய பார்த்திபன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மணிகண்டன் குபேந்திரன் கொலை முயற்சிக்கு தூண்டுதலாக இருந்த ஜெயப்பிரியா ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Follow Us