கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவண்ணாமலை இருந்து இன்று காலை புறப்பட்ட அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் பிற்பகலில் மணலூர்பேட்டை சென்றடைந்தார்.

Advertisment

அதுமட்டுமின்றி திருக்கோவிலூர் மணலூர்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட சுவாமிகள் ஆற்று திருவிழாவில் கலந்து கொள்ளும். இன்று மாலை 5 மணி அளவில் தீர்த்தவாரி முடிந்து பொது மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு புறப்படும் நிலையில் ஆற்றுப் பகுதியில் உள்ள தற்காலிக பலூன் கடையில் திடீரென பலூன் நிரப்பப்படும் போது கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் நிகழ்விடத்திலியே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

Advertisment

பலூன் வெடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியில், மணலூர்பேட்டை ஆற்று ஹீலியம் கேஸ் சிலிண்டர் பலூன் நிரப்புவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த கேஸ் சிலிண்டர் ஆனது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதில் 13 நபர்கள் தற்போது வரை திருவண்ணாமலை மருத்துவ மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கலா எனும் பெண் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இதுபோன்ற சிலிண்டர்களுக்கு உரிமம் உள்ளதா என்ற செய்தியாளர் கேள்விக்கு தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே அது குறித்து தெரியவரும் என்றார். எதிர்வரும் ஆற்று திருவிழாவில் இதுபோன்ற விபத்து ஏற்படுத்தக்கூடிய சிலிண்டர்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு விசாரணைக்கு பின்னரே தெரிவிக்கப்படும் என்று கூறினார்.