ஹிஜாப், நிகாப், பர்தா, முகமூடிகள் அல்லது தலைக்கவசங்கள் அணிந்தவர்கள் உட்பட்டவர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக பீகார் முழுவதும் உள்ள நகை கடைக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisment

பீகார் மாநிலத்த்தில் உள்ள நகைக் கடைகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தொடர் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. அதனால், நகைக்கடைக்குள் ஹிஜாப், நிகாப், பர்தா, முகமூடிகள் அல்லது தலைக்கவசங்கள் அணிந்தவர்கள் உட்பட, முகம் முழுமையாகவோ அல்லது பாதி பகுதியாகவோ மறைக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநிலத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அகில இந்திய நகைக்கடைகள் மற்றும் தங்கக் கூட்டமைப்பி (AIJGF) அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஹிஜாப், முகமூடி உள்ளிட்டவற்றை அணிந்தபடியே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும், இந்த கட்டுப்பாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் பொருந்தும் என கடை சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த தடை நடவடிக்கை, இன்று (08-01-26) முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஏற்கனவே மாநிலத்தின் சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தங்கள் கடைகளுக்கு வெளியே இவ்வாறு ஹிஜாப் உள்ளிட்டவற்றை அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகைகளை கடை உரிமையாளர்கள் வைத்துள்ளனர். இதற்கிடையில், பாட்னாவில் உள்ள கடைகளுக்கு வெளியே எச்சரிக்கையுடன் கூடிய சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில், ‘ஒரு வாடிக்கையாளர் முகத்தை மூடி வைத்திருந்தால், எந்த வாங்குதலும் அல்லது விற்பனையும் அனுமதிக்கப்படாது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இது குறித்து லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி எம்.பி. ஷாம்பவி சவுத்ரி கூறுகையில், ‘இந்த முடிவை மத அல்லது சாதி கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. இது பாதுகாப்பு பற்றியது. இந்த கட்டுப்பாடு புர்கா அல்லது ஹிஜாப் மட்டும் அல்ல, ஹெல்மெட் மற்றும் எந்த வகையான முக மறைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. மக்கள் இதை ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக கண்டிப்பாக பார்க்க வேண்டும்’ என்று கூறினார்.