'Even if Edappadi Palaniswami gets the Nobel Prize for service...' - R.P. Udayakumar interview Photograph: (admk)
இன்று திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''எஸ்.ஐ.ஆர் பற்றி பல விளக்கங்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டு, அண்டை மாநிலங்களில் கொடுக்கப்பட்டு இப்பொழுது பல மாநிலங்களில் மேற்கோள்ள இருக்கிறார்கள். திருத்தங்கள் மேற்கொண்ட பிறகுதான் அதில் இருக்கக்கூடிய நிறை குறைகள் தெரியும். இப்பொழுது ஒரு திருத்தம் செய்வதற்கே என் அரசு அஞ்சுகிறது. ஏனென்றால் இப்பொழுது இருக்கக்கூடிய ஸ்டாலின் அரசு என்பதை மறந்துவிட்டு பேசுகிறாரா என்பது தெரியவில்லை.
தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் அவர்கள் இன்றைக்கு உத்தரவு பிறப்பித்தாலும் கூட மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அந்த அதிகாரிகள் தான் இதை செயல்படுத்தப் போகிறார்கள். அப்பொழுது முதலமைச்சர் தாரளமாக கேட்கலாம். இதில் என்ன குறை இருக்கிறது, தவறு இருக்கிறது என கேட்கலாம். அவர்கள் விளக்கம் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் உடைய கட்டுப்பாட்டில் அவர்கள் சென்றாலும் கூட மாநில அரசுக்கு கட்டுப்பட்டவர்கள் தான். அந்த அச்சம் என்பது இன்றைக்கு தேவையில்லாத ஒன்று.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய டி.டி.வி.தினகரன் அதிமுகவை காப்பாற்ற வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது என்று புதிய அவதாரம் எடுத்ததை போல, ஏதோ இப்பொழுதுதான் கட்சி தொடங்கியதை போல, இப்பொழுது தான் கட்சிக்கு கொள்கைகளை வகுத்ததே போல ஒரு புதிய விளக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவது எல்லாம் பழைய பிரிண்ட். ஆனால் புதிய படமாக வெளியிட்டு இருக்கிறார். எனவே அந்த படம் ஓடாது. தன்னை பல புதிய வடிவங்களில் பழைய பிரண்டை வெளியிட்டாலும் மக்களிடம் வரவேற்பு கிடைக்காது. அதிமுகவை காப்பாற்றுங்கள் என யாரும் டி.டி.வி.தினகரனிடம் முறையிட்டதாக தெரியவில்லை. எந்த தொண்டனும் அவரிடம் முறையிட்டதாக தெரியவில்லை. அவர் அதிமுக வேண்டாம் என்றுதான் ஜெயலலிதா பெயரில் கொடியை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார், சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார், உள்ளாட்சி தேர்தலை சந்தித்தார். அத்தனை தேர்தல்களிலும் மக்களால் அவர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்''என்றார்.
'துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என செங்கோட்டையனும், தினகரனும் தெரிவித்துள்ளனர்' என்ற கேள்விக்கு, ''சேவைக்கு நோபல் பரிசு மிக விரைவில் எடப்பாடிக்கு கிடைத்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவருடைய வாக்கு பொன்னாகட்டும். சேவைக்கு நோபல் பரிசு கிடைக்கும். எனக்கு தெரிந்து சேவைக்கு தான் கொடுப்பார்கள் தவிர துரோகத்திற்கு என்றும் கொடுப்பதாக தெரியவில்லை'' என்றார்.
  
 Follow Us