அந்தியூரில்  அனைத்து மதத்தினருடன் மத நல்லிணக்கத்தோடு இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களுடன் கோலாகலமாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

Advertisment

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அந்தியூர் பேரூராட்சியில் அந்தியூர் மக்களின் சார்பில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா அந்தியூர் தேரடித்ததிடலில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர்அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Advertisment

இன்று காலை அந்தியூர் பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் இருந்து கோவில் செல்லீஸ்வரர் கோவில் பெருமாள் கோவில் அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் அந்தியூர் காவல் நிலையம் அருகில் உள்ள தேவாலயத்தில் இருந்து கிறிஸ்தவர்கள், தவிட்டுப்பாளையம் தேவாலய கிருஸ்துவர்கள் மற்றும் தவிட்டுப்பாளையம் பாதிரியார்கள் மற்றும் அந்தியூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் இருந்து ஹஜ்ரத் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகியவர்களை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நேரடியாக சென்று அவர்களை அழைத்து பம்பை, தாரை, நாதஸ்வரம், தவில் மேளதாளம் முழங்க அந்தியூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அழைத்து வரப்பட்டு தேர் வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர்,அந்தியூர் தேவாலய பாதிரியார், தவிட்டுப்பாளையம் தேவாலய பாதிரியார் ,அந்தியூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் ஹஜ்ரத்,  அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அர்ச்சகர், செல்லீஸ்வரர் கோவில் அர்ச்சகர் பெருமாள் கோவில் அர்ச்சகர், பூசாரிகள் என இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ இன மக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Advertisment