Advertisment

சமவேலைக்கு சம ஊதியம்; ஆசிரியர்கள் போராட்டம்- 1,560 பேர் மீது வழக்குப்பதிவு

5898

teacher Photograph: (police)

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு.  கடந்த 2009 ம் ஆண்டு மே 31 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.8370  ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் ஜூன் 1 முதல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இரண்டு நியமனத்திற்கும் இடையில் அடிப்படை ஊதியத்தில்  வித்தியாசம்  3170 ஆக  இருந்தது. அந்த வித்தியாசம் தற்போது 16000 ரூபாய் வரை மாறியுள்ளது. இரண்டு நியமனங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் வேலை மற்றும் தகுதி போன்றவை ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில், ஊதியத்தில் மட்டும் எதற்காக இந்த வித்தியாசம் என ஏற்கனவே பல குரல்கள் எழுந்துள்ளன.

Advertisment

இந்த வேறுபாட்டை களைய கடந்த அதிமுக ஆட்சியில், இடைநிலை ஆசிரியர்களால் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சியான திமுக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சம வேலைக்கு சம ஊதியம் அளிக்கப்படும் என உறுதியளித்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கடந்த 2022 ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

Advertisment

இன்று வரை அந்த குழு அறிக்கையை சமர்பிக்காததையடுத்து, மீண்டும் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 1560  பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு ஆசிரியர்களை வஞ்சிப்பதாகவும், காவல்துறை ஆசிரியர்கள் மீது செய்யும் அடாவடிப்போக்கை நிறுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

Chennai police struggle teacher
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe