EPS's response to the minister about DGP appointment
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இன்று (24.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் நிரந்தர டிஜிபியை நியமிப்பதில் ஏன் தடுமாறுகிறார்கள்? நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியை நியமிக்கிறார்கள். மத்திய தேர்வாணையம் பணியாளர் தேர்வாணையை அனுப்பப்பட்ட பிறகும், டிஜிபி நியமனத்தில் இன்னும் காலதாமதம் ஆகிறது என ஒருவர் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார்.
அதன்படி, நிரந்தர டிஜிபியை நியமிக்க வேண்டும் என மூன்று வாரம் கால அவகாசம் நீதிமன்றம் கொடுத்தது. இது தான் இன்றைக்கு நிலைமை. எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லையென்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சொல்கிறார். எனக்கு அருகதை இருக்கிறது. உங்களுக்கு அருகதை இருக்கிறதா என்று தெரியவில்லை.
டிஜிபிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேரும், இவர்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள் என்பதை கருதி தான் இதுவரைக்கும் நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் இருக்கின்றனர். ஒரு சட்டத்துறை அமைச்சர், இப்படி தவறாக பேட்டி கொடுப்பது வெட்கக்கேடான விஷயம். இப்படிபட்ட அமைச்சர்கள் இருந்தால், இந்த நாடு உறுப்படியாகும்?” என்று ஆவேசமாகப் பேசினார்.
Follow Us