சென்னையில் உள்ள அனைத்து நகரங்களிலும் குறிப்பாக மக்கள் தொகை அதிகமாக இருக்கக்கூடிய நகரங்களில் போக்குவரத்து சிரமங்களை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் பயண சேவை செயல்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தப்படியாக உள்ள திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ள நகரங்களிலும் இந்த மெட்ரோ ரயில் பயண திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

Advertisment

அதன் முதற்கட்டமாக மதுரை மற்றும் கோவை ஆகிய இரண்டு மிகப்பெரிய நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் பணிகளுக்கான திட்ட அறிக்கையை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தது. ஆனால், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கு குறைந்தபட்சம் 20 லட்சம் மக்களாவது நகரங்களில் இருக்க வேண்டும். ஆனால், இரண்டு நகரங்களில் 20 லட்சத்துக்கு குறைவான மக்கள் இருப்பதால் இந்த திட்டவரைறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, தமிழக அரசு அனுப்பிய திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில், கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடியிட, கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளார். கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (19-11-25) கோவை வந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் நலன் சார்ந்த 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதில் குறிப்பாக, கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், கோவை- ராமேஸ்வரம் ரயில் பாதையை புதிதாக அமைகக் வேண்டும், கோவையில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய இரவு நேர ரயில்கள் அமைக்க வேண்டு உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment