Advertisment

மயங்கி விழுந்த மா.செ- கண்டுகொள்ளாமல் பேசிய இபிஎஸ்

5935

EPS spoke without noticing the fainted M.S. Photograph: (admk)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவைகள் குறிப்பாக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பரப்புரையைத் தொடங்கி இருக்கிறார். இன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''கட்சியின் கிளைச் செயலாளராக இருந்தவர்தான் இந்த கட்சிக்கு பொதுச்செயலாளராக முடியும். வேற எந்த கட்சிலாவது முடியுமா? திமுகவில் கலைஞர் குடும்பத்திற்கு மட்டுமே ஆட்சி அதிகாரம் இருக்கும். ஆனால் அதிமுக ஒரு ஜனநாயக கட்சி. இங்கே உழைக்கின்றவர்களுக்கு மரியாதை உண்டு.

Advertisment

உழைப்புக்கு ஏற்ற பதவி அவர்களுடைய வீட்டு கதவைத் தேடி தானாக வரும். தேடி வந்து பதவி கொடுக்கும் கட்சி அதிமுக'' எனப் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அருகில் நின்றுகொண்டிருந்த அதிமுக மாவட்டச் செயலாளர் பலராமன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக வைரஸ் காய்ச்சல் காரணம் சிகிச்சையில் பலராமன் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் பரப்புரையில் அதிமுக மா.செ மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கீழே விழுந்த மாவட்டச் செயலாளரை அங்கிருந்தவர்கள் தூக்கிச் செல்ல முயன்றனர். ஆனால் இத்தனை நடந்தும் எடப்பாடி பழனிசாமி சிறிதும் கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

admk edappaadipalanisamy Election Gummidipoondi thiruvallur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe