விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா? என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. முதல்வர் , நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என "ஷோ" காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?

Advertisment

வருவதாக சொன்ன நிறுவனங்களே  பேக் ஆப் (Back Off) செய்யும் நிலையில் தான் முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது. இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள் என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?. முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார்.

Advertisment

இத்தகைய வெறும் ஷோ ஆப் ( Show-off) ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்?. தமிழ்நாடு தொழில்களுக்கான வாய்ப்புகளின் பூமியாக இருந்தது. இன்று, அது தவறவிட்ட வாய்ப்புகளின் பூமியாக மாறிவிட்டது - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் (Tamil Nadu was a land of opportunities for industries. Today, it’s a land of missed chances - the legacy of mk stalin’s regime). புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

cm-mks-6

வரவிருக்கும் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு எழுச்சி பெறும், மீண்டும் கட்டமைக்கப்படும், அதன் தொழில்துறை மகத்துவத்தை மீட்டெடுக்கும் (But the story is not over. Tamil Nadu will rise, rebuild, and reclaim its industrial greatness under forthcoming ADMK regime). இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026 இல் அதிமுக ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment