மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (05.12.2025) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முன்னிட்டு, அதிமுகவின் மூத்த தலைவர்கள், ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ அதிமுக தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழ்பவர் ஜெயலலிதா.
,"மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி ஜெயலலிதா ஆவார். நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை, இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம். ஜெயலிதாவின், 9ஆம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்று ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, அதிமுக தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/05/jayalalithaa-eps-2025-12-05-10-01-12.jpg)