சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தக் கோரி நேற்று (17.02.2026) போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சிராணி போராடியுள்ளார். அப்போது போராட்டம் நடத்திய ஜான்சிராணி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளைக் கைது செய்த போலீசார் அவர்களை, அங்குள்ள பேருந்துகளில் ஏற்றி அலைக்கழித்துள்ளனர்.
அதன் பின்னர் தாம்பரம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போராட்ட களர்களை இறக்கி விட்டுள்ளனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் பேருந்தில் இருந்து இறங்க மறுத்த ஜான்சி ராணியை போலீசார் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜான்சிராணி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து, வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/18/cpim-bala-krishnanan-wife-jhansi-rani-treatment-2026-02-18-11-48-35.jpg)
காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணனின் மனைவியுமான பா. ஜான்சிராணி படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று, முதல்வர் மு.க. ஸ்டாலினின் அரசு அனைத்து விதமான கோரிக்கைக் குரல்களை ஒடுக்கப் நினைப்பதுதான் திமுகவினுடைய பாசிச மனநிலைக்கான (Fascist mentality) ஆதாரம் ஆகும்.
ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து, அடிப்படை உரிமைகளை கூட மறுத்து, தாக்குதல் நடத்தியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். a
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/18/eps-sad-2026-02-18-11-47-45.jpg)