Advertisment

“எழுதாத பேனாவை நடுக்கடலில் வைப்பதற்கு அரசாங்கப் பணத்தை ஒதுக்கீடு செய்கின்றனர்” - இ.பி.எஸ். பேச்சு!

eps-mic-6

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (04.01.2026)பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “சென்னை மாநகரத்தின் மத்திய பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார்பந்தத்தை நடத்துகிறார். எழுதாத பேனாவை நடுக்கடலில் வைப்பதற்கு அரசாங்க பணம் 82 கோடி ஒதுக்கீடு செய்கின்றனர். எழுதாத பேனாவை எங்கே வைத்தால் என்ன?. எழுதுகிற பேனாவை அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்குக் கொடுங்கள். அதனைப் பாராட்டுவார்கள்

Advertisment

சிந்தித்துப் பாருங்கள். இந்த அரசாங்க பணத்தை எப்படி எல்லாம் ஊதாரித்தனமாகச் செலவு செய்கின்றார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொருடைய உழைப்பிலும் வரி மூலமாக அரசாங்கத்துக்குப் பணம் வந்து கொண்டிருக்கிறது. அந்த பணத்தை எப்படி எல்லாம் இந்த அரசாங்கம் ஊதாரி செலவை எழுதிக் கொண்டிருக்கிறது. அண்மையிலே எனக்குக் கிடைத்த தகவல் படி சுய உதவிக் குழு அது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு ஆய்வு செய்வதற்காக ரூ. 44 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாதம். அந்த பணத்தை ஆட்டை போடுவதற்கு அதைக் கொள்ளை அடிப்பதற்கு ரூ. 44 கோடியை இந்த சுய உதவிக் குழுவை ஆய்வு செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர். 

Advertisment

நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றால் ஒரு ஆண்டுக்கு முன்பு ஆய்வு செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் தேர்தலுக்கு 2 மாதங்கள் தான் இருக்கிறது. இப்போது அதற்கு நிதி ஒதுக்கி இருக்கிறீர்கள். இந்த நிதியை இவர்கள் சுருட்டுவதற்காகத்தான். ஆய்வு என்ற போர்வையில் இந்த நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள். இது குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டி எடுத்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார் அதிமுகவில் கூட்டணி இல்லை, கூட்டணி இல்லை என்று. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே பொறுத்திருங்கள். 

cm-mks-1

அதிமுக எப்படி கூட்டணி அமையும் வரை பொறுத்திருங்கள். எடப்பாடி பழனிச்சாமி கிராமத்திலிருந்து வந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஸ்டாலின் அவர்களே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலே வலுவான கூட்டணி அமையும். 234 சட்டமன்றத் தொகுதியிலே பெரும்பான்மை இடங்களிலே அதிமுக கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் நேரத்திலே 525 அறிவிப்புகள் வெளியிட்டார்கள்.

பத்திரிக்கையில் பார்க்கிறேன் 80% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக ஒரு பச்சை பொய்யை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார். திமுக நிர்வாகிகள் குறிப்பிட்டு பத்திரிக்கையிலே வந்த செய்தியை நிறைவேற்றினார்களா?. மாணவர்கள், இளைஞர்கள் வங்கியில் வாங்கிய கல்விக்கடன் ரத்து என்று திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். ரத்து செய்தார்களா?. மாதம்தோறும் கேஸ் மானியம் 100 ரூபாய் கொடுத்தார்களா?. ரேஷன் கடையில் மாதம்தோறும் சர்க்கரை கூடுதலாக ஒரு கிலோ கொடுப்போம் என்றார்கள். கொடுத்தார்களா?” எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

dmk admk edappadi k palaniswami mk stalin pen Salem Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe