‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

அதன்படி, கரூரில் எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், “அதிமுகவின் அழுத்தத்தின் காரணமாகவே மகளிர் உரிமைத்தொகை கிடைத்தது. இந்த 6 மாதத்தில் மக்களுடைய கஷ்டத்தை பார்த்து உரிமைத்தொகை கொடுக்கவில்லை, தாய்மார்களுடைய கஷ்டத்தை பார்த்து கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த குடும்பத்தாருடைய ஓட்டு ஸ்டாலினுக்கு தேவை. அதனால், அந்த விதிகளை கலைத்து 30 லட்சம் பேருக்கு அந்த உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே அவர்களுக்கு 54 மாதம் போய்விட்டது. இன்னும் 6 மாதம் தான் கிடைக்கிறது. இப்படி மக்களை ஏமாற்றுகின்ற அரசு தொடர வேண்டுமா?” எனப் பேசினார். 

Advertisment