விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த கோவிலில் ராஜபாளையத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 50), சங்கரபாண்டியன் (வயது 65) மற்றும் மாடசாமி ஆகிய மூவர் காவலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். அந்த வகையில் மாடசாமி நேற்று (10.11.2025) பகலில் வேலை பார்த்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
அதே சமயம் நேற்று மாலை பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரும் பணிக்கு வந்தனர். இதனையடுத்து இன்று (11.11.2025) காலை 6 மணியளவில், அவர்கள் இருவரையும் பணியில் இருந்து மாற்றி விடுவதற்காக மாடசாமி கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் கீழே உள்ள சிறிய கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் காவலாளிகள் இருவரும் கோவிலின் உள்ளே வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இது குறித்து உடனடியாக கோயில் ஊழியர்கள் மூலமாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கோயிலில் ஆய்வு செய்தனர்.
அதில் கோயிலில் இருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு புறம் இருவரது உடலையும் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்றபோது காவலர்கள் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜபாளையம் அருகே காவலாளிகள் இருவர் கோவிலுக்குள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள அப்பகுதி மக்கள் மத்தியில் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/11/cm-mks-sad-2025-11-11-14-37-38.jpg)
இந்நிலையில் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு முதல்வரே முழு பொறுப்பு என என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது? பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு முதல்வரே முழு பொறுப்பு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/11/tn-sec-mks-2025-11-11-14-37-59.jpg)
ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் முதல்வர் தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனம். கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/11/eps-mic1-2025-11-11-14-37-08.jpg)