தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அதில், “இனி எப்போதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழகத்தில் வராது. இந்த தேர்தலோடு திமுகவிற்கு இறுதி தேர்தல். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது திமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதில் நான்கில் ஒரு பங்கு தேர்தல் அறிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை. 

Advertisment

எல்லா தரப்பு மக்களும் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் போராட்டம், செவிலியர்கள் ஒரு பக்கம் போராட்டம், பகுதி நேர ஆசிரியர்கள் ஒரு பக்கம் போராட்டம், இடைநிலை ஆசிரியர்கள் ஒரு பக்கம் போராட்டம், டாக்டர்கள் ஒரு பக்கம் போராட்டம் சத்துணவு அமைப்பாளர்கள் ஒரு பக்கம் போராட்டம் நடத்துகின்றனர். இன்று தமிழகம் முழுவதும் போராட்ட களமாக மாறிவிட்டது. எங்குப் பார்த்தாலும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு மக்களுடைய வெறுப்பைச் சம்பாதித்த அரசு திமுக அரசு. அதனால் இந்த தேர்தலோடு திமுகவுக்கு மக்கள் விடை கொடுத்து விடுவார்கள்” எனத் தெரிவித்தார்.