சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில்  இன்று (15.10.2025) 2வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இன்றைய தினம் அதிமுக சார்பாகச் சட்டப்பேரவையில் பேரவை விதி 56இன் கீழ் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து பேரவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்குக் கோரிக்கை வைத்தேன். 

Advertisment

அவர் அந்தக் கோரிக்கையை நான் ஏற்கின்றேன். அதே சமயத்தில் இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு சில விளக்கத்தை அளிப்பார் என்று குறிப்பிட்டார். நான் சட்டப்பேரவைத் தலைவரிடத்திலே கேட்டுக்கொண்டதெல்லாம் கரூர் சம்பவம் குறித்து முதல்வர் கருத்துச் சொல்வது என்றால் இது பிரதான எதிர்க்கட்சி அதிமுக. கரூர் சம்பவம் நடைபெற்ற நிகழ்வு குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் எங்களுடைய (அதிமுக) கருத்துக்கள் தெரிவித்த பிறகு முதலமைச்சர் பதிலளிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டேன். 

Advertisment

சட்டப்பேரவை தலைவர் விதி எண் 56இன் கீழ் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு உடனே முதலமைச்சரை அழைத்து நீங்கள் அரசினுடைய கருத்தைக் குறிப்பிடலாம் என்று அவருக்கு அனுமதி கொடுத்தார். நான் இது முக்கிய பிரச்சனை என்ற காரணத்தினால், 41 பேர் உயிரிழந்து மிகத் துயரமான சம்பவம் என்ற காரணத்தினால் நாங்கள் அமைதி காத்து சட்டப்பேரவை தலைவர் சொன்னதற்குச் சம்மதித்து முதலமைச்சர் என்ன கருத்தைச் சொல்வார் என்பதை நாங்கள் கேட்போம் என்று அங்கேயே அமர்ந்து முதலமைச்சர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் நாங்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் திமுக அரசு, கரூர் நிகழ்வு குறித்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிவித்தார். 

tn-assembly-mks-speech

அதற்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவை விதி 56ன் கீழ் நான் பேசுவதற்காக அனுமதி கேட்டேன். அனுமதி கொடுத்தார்கள். அந்த அடிப்படையில் நான் பேச ஆரம்பித்தேன். அதில் 27.09.2025 அன்று வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு 10 நிமிடத்திற்குப் பேசிக் கொண்டிருந்திருப்பார். அந்த சமயத்தில் ஒரு செருப்பு வந்து விழுகின்றது. இதனை நான் சட்டமன்றத்தில் பேசினால் அதனை நீக்கி விடுவார்கள். அதனால் இங்கு மக்களுக்குத் தெரிவிப்பதற்காக ஊடகத்தின் வாயிலாகத் தெரிவிப்பதற்காகத் தெரிவிக்கின்றேன். 

Advertisment

ஊடகத்தில் வந்த செய்தியைத் தான் தெரிவிக்கிறேன். அந்தக் கூட்டத்தில் 10 நிமிடம்தான் அதில் பேசிட்டு இருந்தார். உடனே ஒரு செருப்பு வந்து விழுகிறது. அதைப் பற்றி இந்த அரசு அவருடைய கருத்து எதையுமே சொல்லவில்லை. அதற்குப் பிறகு கிட்டத்தட்டக் கூட்ட நெரிசலில் சுமார் 41 பேர் இறந்திருக்கின்றார்கள். அதில் 10 குழந்தைகள், 18 பெண்கள், 13 பேர் ஆண்கள் என்று தகவல் கிடைத்திருக்கின்றன. அதோடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற அரசாங்கம் இந்த கூட்டத்திற்குக் முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த உயிர்ப் பலியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாகத்தான் பார்க்கப்படுகிறது. 

karur-stampede-karur-town-ps

அது எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி . அந்த அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்காத காரணத்தினால் இந்த அரசினுடைய அலட்சியத்தால் 41 பேர் உயிரிழந்திருக்கின்ற சம்பவத்தை நான் குறிப்பிட்டேன். அதுவும் அவர்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விட்டார்கள் என்று கருதுகிறேன். இதெல்லாம் நடந்த சமூகம்தான். புதுசா நான் எதுவுமே சொல்லவில்லை” எனப் பேசினார்.