கோப்புப்படம்
தமிழ்நாட்டு மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று (13.02.2026) வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம். 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம். திராவிட மாடல் 2.0 இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி வெல்வோம் ஒன்றாக” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் தோல்வி பயம், முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா?. 28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே?.
சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த பேட்ச் ஒர்க் (Patchwork) வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?. செப்டம்பர் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34 ஆயிரம். ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3 லட்சத்து 50 ஆயிரம். இதை திமுக ஆட்சியில் வீட்டு பில்லே சாட்சி என்று வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/13/mks-eps-mic-2026-02-13-12-20-47.jpg)
இப்போது மாதம் 2000 ரூபாய் என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே. யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. அனைத்து குடும்ப அட்டைக்கும் என்று அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2000 என்று நான் அளித்த வாக்குறுதியானது, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us