அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இன்று (24.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “டெல்டா மாவட்டத்தில் குருவைச் சாகுபடி செய்த விவசாயிகள் எல்லாம் தங்களுடைய உற்பத்தி செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விற்பனை செய்கின்ற சூழல் இருக்கின்ற நேரத்தில் அரசு மெத்தனப் போக்கில்  நடந்த கொண்ட காரத்தினால், அலட்சியமாக நடந்து கொண்டதினால் தான் விவசாயிகள் துன்பத்திற்கு ஆளானதிற்குக் காரணம். 

Advertisment

நான் 17.10.2025இல் சட்டமன்றத்தில் பேசினேன். நான் அன்றைய தினமே சட்டமன்றத்தில் சொன்னேன். இன்றைக்கு 6 லட்சம் ஏக்கர் டெல்டா மாவட்டத்திலே குறுவை சாகுபடி பயிர் செய்துள்ளனர். அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட, குருவைச் சாகுபடி விளைச்சல் எவ்வளவு இருக்கிறது என்று அதிகாரிகளுக்குத் தெரியும். அப்படி இருக்கின்ற போது முன்கூட்டியே திட்டமிட்டு விவசாயிகள் அறுவடை செய்யச், செய்ய விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்தவுடன் உடனடியாக அதை நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. 

Advertisment

தொடர் மழையில நனைந்திருக்காது. ஆனால் இந்த அரசு, முறையாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல்  செய்யவில்லை. அதனால் தான் விவசாயி பாதிக்கப்பட்டார்கள். முழுக்க முழுக்க இந்த  திமுக அரசினுடைய அலட்சியத்தால் தான் இன்றைக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இல்லையெனில் இந்த பாதிப்புக்கு விவசாயிகள் உள்ளாயிருக்க மாட்டார்கள். யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது. நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் தெளிவா பேசி இருக்கிறேன். அதற்குப் பிறகாவது இவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும் அதுவும் எடுக்கவில்லை” எனப் பேசினார்.