அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 உட்பிரிவு 7 மற்றும் 25 உட்பிரிவு 2இன்படி, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (10.12.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தின் தொடக்கத்தின் போது, விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதைச் செலுத்தினார். 

Advertisment

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருப்பிக்கின்ற போது, எப்படி நடத்துக் கொண்டார்கள். அந்த தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்பதற்கு அதிமுகவோடு இருந்தவர்களே சில பேர் எதிரிகளோடு சேர்ந்து கை கோர்த்து, சோதனையை உருவாக்கினார்கள். சட்டமியற்றும் மாமன்றத்தில், சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவின் பெயரில் பெரும்பான்மையை நிருப்பிக்கின்ற தீர்மானம் கொண்டு வருகின்ற போது, இப்போது உள்ள முதல்வர், அப்போதையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும், அவரது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது குறித்து தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். 

Advertisment

இருப்பினும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவால் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு  அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற நிலை ஏற்பட்டது. அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்னுடைய மேசையின் மீது ஏறி  நடனம் ஆடினார்கள். அப்போது இருந்த அமைச்சர்களின் மேசையின் மீது ஏறி சட்டப்பேரவை தலைவரைக் கீழே இழுத்துத் தள்ளி அவருடைய இருக்கையில் அமர்ந்தனர். அவருடைய மைக்கை உடைத்தார்கள். அப்படிப்பட்ட கொடுமையான நிகழ்ச்சியை ஏற்படுத்தியவர் இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 

admk-meeting-general-boady

அதனை எல்லாம் கடந்தோம். வெற்றி பெற்றோம். அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் சட்டையைக் கிழித்துக்கொண்டு வீதியில்  திரிந்தவர்கள் தான் இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அன்றைக்குச் சட்டையைக் கிழித்துக் கொண்டு தான் வெளியே சென்றீர்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். அப்போது எந்த நிலையில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் அமைந்த பிறகு அதனை உடைக்க பல்வேறு சதித் திட்டங்கள் திட்டப்பட்டன. அதிமுகவை முடக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

Advertisment

பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தார்கள். இவற்றை எல்லாம் தான் நாட்டுக்குச் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். இன்றைக்கும் கூட திமுக, அதிமுக ஆட்சியைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட அற்புதமான ஆட்சியைக் கொடுத்தது அதிமுக. எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை - பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் ஏதாவது குறை இருக்கிறதா. அதனைப் பற்றிச் சொல்லுங்கள். பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். அதிமுக ஆட்சி குறித்து எவ்வித குறையும் சொல்ல முடியவில்லை. பொற்கால ஆட்சியைக் கொடுத்தது அதிமுக. முன்னாள் அமைச்சர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். அதனால் நல்ல ஆட்சியைக் கொடுத்தார்கள். அதே ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர ஒத்துழைக்க வேண்டும். அது நிச்சயம் நிறைவேறும்” எனப் பேசினார்.