தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற  திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக 2001இல் பொறுப்பேற்று இன்று வரை சுமார் 5 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார். தமிழகத்தில் வாழ்கின்ற அத்தனை மக்களின் தலையிலும் கடனை சுமத்தியதுதான் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசாங்கத்தின் சாதனை. 

Advertisment

சாதனை என்று சொன்னால் நம் மீது கடனை சுமத்தியதுதான் திமுக சாதனை. வேறு எந்த சாதனையும் கிடையாது. 73 ஆண்டுக் காலம் தமிழகத்திலே பல்வேறு கட்சிகள் ஆண்டு 2021 வரை 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி கடன் இருந்தது. ஆனால் ஐந்தே ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழக அரசின் கடன் 5 லட்சம் கோடி ரூபாய். நிர்வாகத் திறமையற்ற அரசாங்கம் விலைவாசி உயர்வு சட்ட ஒழுங்கு சீர்குலைவு, மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மை கிடைக்கவில்லை. எங்கே பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை. 

Advertisment

போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. அப்படிப்பட்ட ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்றது. விரைவில் தேர்தல் வர இருக்கின்றன. அந்த தேர்தலிலே மக்களுடைய ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றியைத் தேடித் தாருங்கள்” எனப் பேசினார். அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீர் இல்லாமல் வாடும் நெல் பயிர்களைக் கண்டதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசுகையில், “தஞ்சை பகுதியில்  விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கு போதிய அளவுக்குத் தண்ணீர் பாய்ச்சினால் தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். இன்று அந்த நெற்பயிர்கள் எல்லாம் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறது. 

eps-mic-pm

விவசாயிகள் கடன் வாங்கி நடவு செய்திருக்கும் நிலையில், சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால் நெல் எல்லாம் பதராகி விடும். அதனால் அரசு மேட்டூர் அணையில் இருந்து உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போது தான் பயிர்களைக் காப்பாற்ற முடியும். இன்னும் 20 நாட்களில் நெல் அறுவடைக்கு வந்து விடும். அதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்து விடும். அரசுக்கு அதிகமான நெல் உற்பத்தி கிடைக்கும். எனவே, விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்…’’ என்று கோரிக்கை வைத்தார். 

Advertisment