மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த   பாடில்லை; மழைநீரும் வடிந்த பாடில்லை; அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை; இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்? என  திமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது 

Advertisment

உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதை பதைக்க வைக்கின்றன. மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட  முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன? ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா?

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த   பாடில்லை; மழைநீரும் வடிந்த பாடில்லை; அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை;இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்? தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதனிடையே சம்பவம் குறித்து  விளக்கமளித்துள்ள சென்னை மாநகராட்சி, அந்தப் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் இல்லை என்றும், சம்பவம் நடந்த இடம் ஒரு சிறிய வடிகால் தொட்டி மட்டுமே எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தத் தொட்டியில் ஒருவர் விழுந்து உயிரிழப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் கூறியுள்ளது.