Advertisment

முதல்வர் வேட்பாளர் யார்? - ‘டெல்லி தான் முடிவு செய்யும்’  - இ.பி.எஸ் பதில்!

102

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலுவாக இடம் பெற்றுள்ளன.

Advertisment

மறுபுறம், பிரிந்து கிடந்த அதிமுக - பா.ஜ.க கூட்டணி 2026ஆம் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் சேர்ந்திருக்கிறது. இந்த கூட்டணி அறிவித்ததில் இருந்து கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.  அதே சமயம் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருந்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல், முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவில் இருந்துதான் வருவார் என்று தெரிவித்தார். இது அதிமுகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

Advertisment

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் டி.டி.வி. தினகரன், “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்றாலே அது கூட்டணி அமைச்சரவைதான். முதலமைச்சர் யாரென்று கூட்டணி சேர்ந்து முடிவு செய்யும்” என்று தெரிவித்து, அதிமுகவினருக்கு மேலும் அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சென்னைக்கு அமித்ஷா வந்த போது தெளிவாக பேசியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும், மேலும் அதிமுக ஆட்சி அமைக்கும் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அவர் தெளிவாகக் கூறிவிட்டார். இதில் "டெல்லி எடுக்கும் முடிவுதான். உங்களுக்கெல்லாம் தெரியும். மத்திய உள்துறை அமைச்சர் கூறிய பிறகு, அதற்கு அடுத்தபடியாக யார் பேசினாலும் அது சரியாக இருக்காது என்பதுதான் என்னுடைய கருத்து” என்றார்.

b.j.p Tamilnadu edappadi k palaniswami admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe