முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்த உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த சாமானிய மனிதன்! தலைமுறைகள் தாண்டி,எல்லோரும் விரும்பி விளிக்கும்"அண்ணா"! "தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்" என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிட வழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று...

Advertisment

அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது. அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் இயக்கத்தின் வரலாற்று கடமையாகும். மக்கள் துணையோடு இந்த விடியா !

அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் நிறுவிடுவோம்! அதுவே நம் பேரறிஞர் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் அண்ணா நாமம் வாழ்க!' என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு எடப்பாடி தலைமையில் வந்த அதிமுகவினர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக அமைதிப் பேரணியாக வந்த திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.