தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி இன்று (07.01.2026) காலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அதிமுக – பாமக இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஏற்கெனவே அதிமுக, பாஜக இடையிலான கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. தற்போது எங்கள் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இருக்கும் எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர்க்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். 

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் உள்ளிட்டபாஜகவின் மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதோடு திமுக அரசு மீதான ஊழல் புகார் பட்டியலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

eps-anbumani

இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில்  இந்த ஆலோசனையானது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டணியில் கூடுதலாக எந்தெந்த கட்சிகள் இடம்பெற உள்ளது, தொகுதிகள் இறுதி செய்யப்பட வேண்டியது தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 

Advertisment