தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயம், அதற்கான தொழில்நுட்பம் குறித்து வலியுறுத்தி விவசாய மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (19.11.2025) நடைபெற உள்ளது. மொத்தம் 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளவும், மாநாட்டைத் தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம்  நாளை கோவை விமான நிலையம் வருகை தர உள்ளார். அதன்படி கோவை விமான நிலையத்திற்கு மதியம் 01.30 மணியளவில் மணியளவில் வருகை தர உள்ளார். 

Advertisment

அங்குப் பிரதமர் மோடிக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முக்கியத் தலைவர்களைப் பிரதமரைச் சந்திக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை வரவேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.