தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை எனத் தீவிரம் காட்டி வருகின்றனர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் இன்று (25.11.2025) ஆலோசனை மேற்கொண்டார். 

Advertisment

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “எஸ்.ஐ.ஆர். பணிகளில் அரசு ஊழியர்கள் தான் அதில் பி.எல்.ஓ.க்களாக (BLO) செயல்படுகிறார்கள். எனவே அதிமுக பொறுப்பாளர்கள் அவர்கள் கூடவே இருந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிமுக வாக்குகளை திமுகவினர் நீக்கம் செய்யாமல் கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. கள்ள ஓட்டுகளை நீக்குவதற்கு இதுவே சரியான தருணம். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களால் நியமிக்கப்பட்டிருக்கும் பூத் லெவல் ஏஜென்ட்கள், போலி வாக்குகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Advertisment

கள்ள ஓட்டுகளை நீக்குவதற்கு இதுவே சரியான தருணம். அதனால் நீங்கள் கவனமாக பணியாற்ற வேண்டும். கட்சியின் பி.எல்.ஓ.க்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுடன் இணைந்து சரியாகச் செயல்படவில்லை என்றால், உடனடியாக அவர்களை மாற்றம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு எஸ்.ஐ.ஆர். தொடர்பான படிவங்களை நிரப்புவதற்கும், அதில் உள்ள சிரமங்களை களையும் அந்த படிவங்களை நீங்களே நிரப்பி சமர்பிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” எனப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த பணிகளை முறையாக செய்யாத, பல்வேறு மாவட்ட செயலர்களிடமும் எடப்பாடி  பழனிசாமி, தனது அதிருத்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராமநாதபுரம், தேனி, கரூர், திருநெல்வேலி மாநகர், தஞ்சாவூர் மத்திய மாவட்டம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment