அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54-ம் ஆண்டு துவக்க விழாவைக் கொண்டாடும் விதமாக, அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த வா. புகழேந்தி தலைமையில், தொண்டர்களுடன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், ராயக்கோட்டை சாலைச் சந்திப்புப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அண்ணா சொன்னது போல, இன்றைக்கு சட்டமன்றத்தில், இன்றைய ஆளும் கட்சியினர் எம்.ஜி.ஆர். புகழைப் போற்றிப் பேசுவதை நாம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரு இயக்கம், 54-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து, வெற்றி வாகை சூடி, மீண்டும் ஆட்சிக்கு வந்து, ஏழை, எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கில், இன்றைய தினம் ஓசூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு 55-வது ஆண்டில் இந்த இயக்கம் இருக்குமா என்ற கேள்விக்குறி எழுப்பப்பட்டு, தொய்வான நிலைமைக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

Advertisment

இந்த ஆட்சியை நம்மிடம் ஒப்படைத்துச் சென்றவர்களுக்கு துரோகம் இழைத்து, பழனிசாமி, 'எல்லோரையும் சேர விடமாட்டேன்' என்று சொல்லி, பிடிவாதம் பிடித்து, இந்த இயக்கத்தை உடைத்து, பல அணிகளாகச் செயல்படுத்தி, ஒருவரை ஒருவர் பார்க்க முடிகிறது. ஆகவே, அவர் ஒற்றுமைக்கு வரவில்லை என்று சொன்னால், தொண்டர்கள் இடத்தில் ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கும். இனி வேடிக்கை பார்க்க முடியாது. பல மாறுதல்கள் ஏற்படும். இது தொடர்ந்தால், பழனிசாமி தலைமையில் நீடிக்க முடியாது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், வரும் தேர்தலில் பழனிசாமி தலைமையில் போட்டியிடுவதற்கு யாரும் வரமாட்டார்கள். அங்கு அனைவரும் உழவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல் ஆக இருப்பவர்கள் எல்லாம் வெளியில் சென்று விடுவார்கள். எங்கே போவது என்று இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர், வேறு ஒரு கட்சியின் கொடியைப் பார்த்து, 'இதோ கொடி பறக்கிறது, பிள்ளையார் சுழி போட்டாச்சு' என்று கூறுகிறார். அப்படியென்றால், நம்ம தலைவர் கொடுத்த கொடி என்ன ஆச்சு? என்பதையெல்லாம் அவர் மறந்துவிட்டார்.

Untitled-1

ஆகவே, அடுத்த ஆண்டில், இதே நாளில், இந்த இயக்கம் ஒற்றுமை இல்லாமல் போய்விட்டால், முழுவதுமாக அழிந்து போய்விடும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால், தொண்டர்கள், 'நாங்கள் விடமாட்டோம். ஒரு புரட்சி வெடிக்கும். பழனிசாமி கட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவார். கட்சியை எப்படி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை தொண்டர்கள் முடிவு செய்வார்கள்,' என்று கூறுகின்றனர். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனப் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், அனைவரும் ஒதுங்கி நிற்கிறார்கள். எல்லோரும் பி.ஜே.பி. என்ற கட்சிக்கு அடிமையாகி, பயந்து கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

எங்கேயாவது யாராவது கால் கிடைக்குமா, உதவுவார்களா என்று அலைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டார். பி.ஜே.பி. கொடியைத் தூக்கிக் கொண்டு, அந்தத் தலைவர்கள், முன்னாள் அமைச்சர் உட்பட, அனைவரும் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கின்றனர். பி.ஜே.பி.யைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, விஜய்யின் கால் கிடைக்குமா என்று அழைக்கும் நிலையை இன்று ஏற்படுத்திவிட்டார்கள். 'விஜய் வெளியே வருவாரா, அவரது கால் கிடைக்குமா, அதில் விழலாமா?' என்று இவ்வளவு மோசமான ஒரு நிலைமையை உருவாக்கி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனிதன் பழனிசாமி.

அவர் திருந்த வேண்டும். எனக்கும் பழனிசாமிக்கும் தனிப்பட்ட பகை ஏதுமில்லை. ஏனென்றால், இந்த இயக்கம் ஒன்று சேர்ந்தால் தான் உண்டு வாழ்வு. அதுதான் எம்.ஜி.ஆர்.க்கும், ஜெயலலிதாவிற்கும் நாம் செய்யும் நன்றிக் கடனாக இருக்கும். ஆகவே, அதைச் செய்வதற்கான காலம் இன்னும் கடந்து போகவில்லை. பழனிசாமிக்கு புத்தி வந்தால், அது நடக்கும். புத்தி வரவில்லையென்றால், அவர் அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவார். 'களைகள் எல்லாம் அகற்றப்பட வேண்டும்' என்றால், பி.ஜே.பி.யை அகற்றிவிட்டு, விஜய் உள்ளே வர வேண்டும் என நினைப்பது போலத் தெரிகிறது," என விமர்சித்த அவர், "அந்தக் களை பி.ஜே.பி. தான்" எனக் கூறுவார்.

நேரத்திற்கு ஏற்றாற்போல மாறிப் பேசுவது அவருடைய தொழிலாக ஆகிவிட்டது. "அவர் பி.ஜே.பி.யைத் தான் களை என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்," என்று நான் கூறுகிறேன். ஒரு பயிரை நன்கு வளர்த்து, அதை அறுவடை செய்து, ஒரு விவசாயி கொண்டாடுவதைப் போல, இந்த இயக்கத்தை ரத்தம் சிந்தி உழைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். களைகள் எல்லாம் இவர் கட்டிய களைகள் தான். ஆகவே, அவர் தினமும் இந்தக் கட்சியைக் கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் சொன்ன களை, பி.ஜே.பி.யாகக் கூட இருக்கும். அவர்களுக்கு முதுகில் குத்தப் பார்ப்பார். பொறுத்திருந்து பார்ப்போம்," என அவர் தெரிவித்தார்.

செங்கோட்டையனைப் பொறுத்தவரை, அவர் ஒரு அமைதியான, நல்ல தலைவர். "அம்மா வழியில் வந்த அமைதியான தலைவர் அவர். என்ன செய்வது எனப் புரியாமல், இடையில் பி.ஜே.பி. அழைத்துப் பேசியதாலேயே, அவர் சற்று அமைதியாக இருப்பதை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.எனவே, யாரும் அமைதியாக இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. அவர் அமைதியாக இருப்பதால், ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று கூறினார்; அதை நான் ஒப்புக்கொள்வேன். இங்கு அமைதி காக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது; தட்டிக் கேட்பதற்கு அனைத்து தலைவர்களும் முன்வர வேண்டும். இவர்கள் ஒதுங்குகிறார்கள்; நாங்கள் ஒதுங்கத் தயாராக இல்லை," எனத் திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.