தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டம், மாநாடு, என தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை மதுரவாயலில் இன்று (25-02-26) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அதில் அவர் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பேசுகையில், “குடிநீர் வரி உயர்வு, குப்பைக்கு வரி உயர்வு என இப்படி வரிக்கு மேல் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாங்கத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். அதற்கு தான் அதிமுகவின் மூன்றாம் கட்டத் தேர்தல் அறிக்கையில் எல்லா குடும்பத்திற்கு ஒரே கட்டமாக ரூ.10,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு கொடுத்தோம். அந்த நிதிச்சுமையை குறைப்பதற்காக உதவி தொகையை அறிவித்தாலும். ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை, பதறுகிறார், வாயில் வடை சுடுகிறேன் என்கிறார். நீங்கள் தான் வாயில் சுடுகிறீர்கள். 5 வருடமாக வடை சுட்டு வடை சுட்டு மக்களுக்கு உங்களுடைய ஆட்சி சலிப்பு ஏற்பட்டுவிட்டது. வெல்வோம், எல்லோருக்கும் எல்லாம், ஓரணியில் தமிழ்நாடு, ஒன்றிணைவோம் வா, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், உங்களுடன் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வம், புதுமைப் பெண், உங்கள் கனவை சொல்லுங்கள் என இவ்வளவு பெயரை வைத்திருக்கிறார். இதில் ஒன்றாவது மக்களுக்கு தெரிகிறதா? இல்லை. பெயர் வைப்பதில் நம்பர் ஒன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். இந்த பெயரில் அடங்கின திட்டம் மக்களுக்கு தெரியுமா?. தினம் ஒரு பெயரை வைத்து திட்டத்தை அறிவிப்பார், போட்டோ சூட் எடுப்பார், பத்திரிகையில் வரும் அதோடு முடிந்துவிடும். பெயர் வைப்பதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொறுத்தமாக இருக்கும்.
அப்படி மக்களை ஏமாற்றுகின்ற ஒரு அரசாங்கமாக இந்த ஸ்டாலின் அரசாங்கம் இந்த ஐந்த ஆண்டு காலம் ஏமாற்றிக் கொண்டிருந்தது. அதற்கு முடிவு கட்டுகின்ற தேர்தல் இந்த சட்டமன்ற பொது தேர்தல். எப்பொழுது தேர்தல் வரும் என்று மக்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றார்கள். எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். மக்கள் ஒரு ஆட்சி அகட்டப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். திமுகவை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்கின்ற கட்சி திமுக கட்சி, திமுக அரசாங்கம். அதிமுக நாட்டு மக்களுக்காக ஆட்சி செய்தது. திமுக வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்கின்ற அரசாங்கம். தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏவுக்கும் போட்டி என்கிறார். அவருக்கு பதற்றம் அதிகமாகிவிட்டது, தோல்வி பயத்தில ஏதோ பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே, தமிழ்நாட்டில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது, டெல்லியில் நடக்கவில்லை. மத்தியில யார் ஆட்சிக்கு வர வேண்டும் நடக்கவில்லை, இங்கே நடப்பது அதிமுக வரவேண்டும் என்கிற தேர்தல், திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற தேர்தல்.
யார் ஆட்சிக்கு வரவேண்டும்? யார் ஆட்சிக்கு வரக்கூடாது? தமிழ்நாட்டில் அதற்காக நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல். இது கூட தெரியாமல் தமிழ்நாட்டுக்கும் என்.டி.வுக்கும் நடக்கிறது என்று சொல்கிறார். இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை இருந்தால் நாடு தாங்குமா? எங்களை எதிர்கக துணிவு இல்லை, திராணி இல்லை, தெம்பு இல்லை. ஊழல் நிறைந்த ஆட்சியாக திமுக கொடுத்தது என தமிழகத்திலே மக்கள் பார்க்கிறார்கள். எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் எல்லா துறையிலும் தடை இல்லாமல் நடக்கிறது. மக்கள் எண்ணுவதெல்லாம் ஒரு நல்ல ஆட்சி தமிழகத்திலே அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட ஆட்சியை அதிமுக கூட்டணி அங்கம் வைக்கின்ற கட்சிகள் வெற்றி பெற்று அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் கூட்டணியை நம்பி தேர்தலை சந்திக்கின்றீர்கள். நாங்கள் கூட்டணி வைத்திருக்கின்றோம், மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம். மக்கள் தான் எஜமானர்கள், மக்கள்தான் முடிவு செய்யக்கூடியவர்கள். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முடிவு செய்யக்கூடிய அதிகாரம் மக்களிடம் இருக்கிறது. அந்த மக்களை நம்புகிறோம். மக்கள் எங்களை நம்புகிறார்கள். அதனால் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அடிமை, பா.ஜ.கவுக்கு அடிமை என்று அடிக்கடி சொல்கிறார். நாங்கள் எப்போதும் யாருக்கும் அடிமை இல்லை” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/25/edaop-2026-02-25-22-20-36.jpg)