மக்கள் அனைவரும் மகிழ்ச்சிப் பெறும் வகையில் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (09-08-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், திமுக உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “2011க்கு முன்பு சேலம் மாவட்டம் எப்படி, 2021 வரை சேலம் மாவட்டம் பல்வேறு துறைகள் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றது என்பதை நாம் எண்ணி பார்க்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சிறப்பான சாலைகள், ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீரை சேமித்து நிலத்தில் நீரை உயரச் செய்தோம். நம்முடைய விவசாயிகள் தொடக்க வேளாண் கூற்று வங்கியிலே வாங்கிய கடன், பயிற்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம். இப்படி விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களைச் செயல்படுத்தினோம். நெசவுத் தொழில், விவசாயம் என இரண்டுமே அதிமுக ஆட்சியில் செழிப்பாக இருந்தது. இன்றைய தினம் நெசவுத் தொழில் நழிவடைந்து கொண்டிருக்கின்றன. விசைத்தெறி தொழிலும் நலிவழிந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஆட்சியுடைய நிர்வாக திறமையற்ற காரணத்தினால் இந்த இரண்டு தொழிலும் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருக்கின்றது. மீண்டும் அதிமுக ஆட்சி மலர்கிற பொழுது இந்த நெசவாளர்களும் அதே போல விசைத்தறி உரிமையாளர்களும் சிறப்பான தொழில் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். நூரேறி திட்டத்தை பொறுத்தவரைக்கும் நான்கு சட்டமன்ற தொகுதி இதில் பயனடைகிறது மேட்டூர் சட்டமன்ற தொகுதி, ஓமலூர் சட்டமன்ற தொகுதி, எடப்பாடி சட்டமன்ற தொகுதி, சங்ககிரி சட்டமன்ற தொகுதி இந்த நான்கு சட்டமன்ற தொகுதியில் இருக்கின்ற ஏரிகள், குளங்கள் நிரப்புவதற்காக இந்த திட்டத்தை நான் முதலமைச்சரா இருந்த பொழுது கொண்டு வந்தேன். முதற்கட்டமாக ஒரு ஆறு ஏரிகள் நீர் நிரப்புகின்ற திட்டத்தை தொடங்கி வைத்தோம். அதற்கு பிறகு, திமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த நான்கு ஆண்டு காலத்தில் ஆமை வேகத்தில் இந்த பணி நடைபெற்று கொண்டிருக்கின்றன. வேண்டுமென்றே திட்டமிட்டு விவசாயிகளை வஞ்சிக்கின்ற விதமாக அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக அதிமுக ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த திட்டத்தை மெல்ல மெல்ல அந்த பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தை ஆமை வேகத்தில் திமுக செயல்படுத்தியதால் தற்போது கலையிழந்து காட்சி அளிக்கப்படுகிறது. பட்டியலின மக்களுக்கு அதிமுக ஆட்சியின் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். நிலமே இல்லாதவர்களுக்கு கூட அரசு தப்பில் இடம் வாங்கி வீடு கட்டித் தரப்படும். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.